நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துறை பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரகுமான். இவர் வாலிபால் பயிற்றுநராக வேலை பார்க்கிறார். இவர் வாலிபால் பயிற்சிக்கு வந்த 17 வயதுடைய 12-ஆம் வகுப்பு மாணவியை போட்டிக்காக வெளியூருக்கு அழைத்து சென்று வந்துள்ளார்.

இதனையடுத்து முகமதுவின் நடத்தையில் சந்தேகம் வந்ததால் மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அவர்கள் மாணவியை வெளியூர் போட்டிக்கு அனுப்ப மறுத்துவிட்டனர். இந்த நிலையில் ரகுமான் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் உதவி எண்ணை தொடர்பு கொண்டு நன்றாக விளையாடும் மாணவியை போட்டிக்கு அனுப்பாமல் பெற்றோர் துன்புறுத்துவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து குழந்தை பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கடந்த ஏழு மாதங்களாக வெளியூர் போட்டிகளுக்கு அழைத்து செல்வதாக கூறி ரகுமான் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் ரகுமானை கைது செய்தனர். அவர் ஏற்கனவே இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டு தற்போது அவர்களையும் பிரிந்து வாழ்வது குறிப்பிடத்தக்கதாகும்.