உலக அளவில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூர் மக்கள் அனைவரும் மனதளவில் கடினமான காலங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று அந்த நாட்டுப் பிரதமர் லாரன்ஸ் வோங் எச்சரித்துள்ளார்.
இந்த ஆண்டு சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும் என்றும், அதே நேரத்தில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் வணிக நிறுவனங்கள், தொழிலாளர்கள் மற்றும் சாமானிய குடும்பங்கள் பெரும் பொருளாதார அழுத்தத்தைச் சுமக்க வேண்டியிருக்கும் என்றும், உலக அளவில் 1970களில் இருந்ததைவிட மோசமான ஒரு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாகச் சர்வதேச எரிசக்தி முகமை எச்சரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“நாம் கடினமான காலங்களுக்குத் தயாராக வேண்டும்” #Singapore | #GlobalCrisis | #LawrenceWong pic.twitter.com/EWeBEEcQuV
— PttvOnlinenews (@PttvNewsX) May 15, 2026
“>
ஹோர்முஸ் நீரிணைப் பகுதி எப்போது திறக்கப்பட்டாலும் உடனடியாக இயல்புநிலை திரும்பாது என்பதால், வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள மக்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் எனப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
