கீவ்: ரஷியா–உக்ரைன் போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து, இரு தரப்பினரும் பெரும் உயிரிழப்புகளை சந்தித்துள்ளனர். வீரர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் பலியாகியுள்ள நிலையில், போர் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீள்கிறது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பொறுப்பேற்ற பிறகு, இந்தப் போருக்கு முடிவு காண மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அத்துடன் போரை மேலும் தீவீர படுத்தினால் பயங்கர விளைவை சந்திக்க கூடும் என டிரம்ப் ஏற்கனேவே ரசியாவிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்

இதன்படி, வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி, அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலம், ஆங்கரேஜ் நகரில் உள்ள எல்மென்டார்ப்-ரிச்சர்ட்சன் கூட்டு படைத்தளத்தில், டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் வ்லாதிமிர் புதின் நேரில் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பில், உக்ரைன் அமைதி ஒப்பந்தம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்கா – ரஷியா தலைவர்கள் நேருக்கு நேர் சந்திக்க உள்ளனர்.

இதேவேளை, ரஷிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்ததாவது: “இந்த சந்திப்பு நெருங்கி வரும் நிலையில், உக்ரைன் அரசு, ரஷிய எல்லைப் பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற டிரோன் மற்றும் எறிகுண்டு தாக்குதல்களில் 22 பேர் பலியாகி, 105 பேர் காயமடைந்துள்ளனர். மொத்தம் 127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளது. மேலும், உக்ரைன் ஒருபோதும் அமைதியை நாடவில்லை என்றும், பேச்சுவார்த்தையை அதிகாரத்தை நீட்டிக்க ஒரு உத்தியாக மட்டுமே பார்க்கிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“>

 

ஆகஸ்ட் 15-ஆம் தேதியிலான இந்த பேச்சுவார்த்தை மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம், 3 ஆண்டுகளை கடந்து நீடித்து வரும் போர் முடிவுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சர்வதேசம் முழுவதும் எதிர்பார்க்கப்படுகிறது.