ஹைதராபாத் நிஜாமாத் பகுதியை சேர்ந்த பெண்ணிற்கும் ஜக்தியால் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இரு வீட்டார் இணைந்து திருமணம் ஏற்பாடு செய்திருந்தனர். கடந்த நவம்பர் மாதம் இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால் நிச்சயதார்த்தம் நடந்த அன்றே திருமணம் கைவிடப்பட்டுள்ளது.

நிச்சயதார்த்தம் முடிந்து மாப்பிள்ளை வீட்டாருக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விருந்து மெனுவில் மட்டன் நல்லி எலும்பு கறி இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் இது தங்களை அவமதிக்கும் செயல் என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெண் வீட்டாரும் இதை முதலிலேயே கூறவில்லை என்று கூறி பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் அது தோல்வியில் தான் முடிந்தது. இரு வீட்டாரும் திருமணத்தை கைவிட்டனர். மட்டன் நல்லி எலும்பு கறிக்காக ஒரு திருமணம் நின்று போனது அப்பகுதியில் பேசு பொருளாகியுள்ளது.