விருச்சிக ராசி அன்பர்களே,

இன்று நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும். வளர்ச்சி  கூடும் நாள் என்று சொல்லலாம். எதிர்காலம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளிஊலக தொடர்பு விரிவடையும். பெற்றோர் வழியில் பெருமைக்குரிய தகவல் வந்து சேரும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்.

எடுத்த காரியம் நல்லபடியாக முடியும். மாலை நேரம்  மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள்.இன்று உடல் ஆரோக்கியத்தை பலப்படுத்துவீர்கள். புத்திசாலித்தனம் வெளிப்படும் நாள். இன்று சொல்ல முடியாத தடைகளையும்  உடைத்தெறிந்து வெற்றி பெறுவீர்கள். கனவுகள் நினைவாகும். கற்பனை திறன் அதிகரிக்கக்கூடும்.

இன்று  பெண்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள் உடல் ஆரோக்கியம் சீராகும். இன்று மாணவர்கள் பொறுப்புடன் செயல்பட பாருங்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது பெற்றோரிடம் சொல்லுவது நல்லது. சிந்திக்காமல் எதிலும் செயல்பட வேண்டாம். இன்று ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  மேற்கு

அதிர்ஷ்ட எண்  :  ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்   : இளம் சிவப்பு மற்றும் நீலம்