ஐபிஎல் போட்டியின் முடிவில் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆட்டோகிராப் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த சிறுவன் ஒருவன் தனது கிரிக்கெட் பேட்டை தூக்கி எறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தில்லியில் நேற்று நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பினார். அப்போது கோலி தனது காதுகளில் ‘இயர்பட்ஸ்’ (Earbuds) அணிந்தபடி சென்று கொண்டிருந்தார்.

அவரைப் பார்ப்பதற்காக நீண்ட நேரமாகக் காத்திருந்த ஒரு சிறுவன், மிகுந்த ஆர்வத்துடன் விராட் கோலியிடம் ஆட்டோகிராப் கேட்டுள்ளார். ஆனால், கோலி அந்தச் சிறுவனைக் கவனிக்காமல் கடந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

தான் ஆசையாகக் கேட்ட ஆட்டோகிராப் கிடைக்காததால் பெரும் ஏமாற்றமடைந்த அந்தச் சிறுவன், அங்கேயே கண்ணீர் விட்டு அழத் தொடங்கினான். ஒருகட்டத்தில் மிகுந்த ஆத்திரமடைந்த அவன், தான் கையில் வைத்திருந்த கிரிக்கெட் பேட்டை ஆவேசமாகத் தூக்கி எறிந்துவிட்டு அழுது கொண்டே  அங்கிருந்து சென்றான்.

ரசிகர்களிடம் எப்போதும் அன்பாகப் பழகும் விராட் கோலி, ஒரு சிறுவனின் கோரிக்கையை நிராகரித்தது போன்ற இந்தச் சம்பவம் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் அதே நேரத்தில் சிறுவனை விராட் கோலி சரியான முறையில் கவனிக்காததால் தான் ஆட்டோகிராப் போடாமல் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.