
ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி இன்று முதல் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் அதிக ரன்கள் அடிக்கக்கூடிய வீரர்கள் குறித்த தங்களுடைய கணிப்பினை முன்னாள் வீரர்கள் பலரும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் அம்பத்தி ராயுடு டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் அடிக்கும் வீரர்கள் குறித்த தன்னுடைய கணிப்பினை கூறியுள்ளார். அதாவது டி20 உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தான் அதிக ரன்கள் விளாசி முதலிடத்தை பிடிப்பார் என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் ரோகித் சர்மா நல்ல பார்மில் இருந்தார். ஐசிசி தொடரில் ரோஹித் சர்மா எப்படி விளையாடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான் என்று கூறியுள்ளார். மேலும் எப்போதும் அதிக ரன்கள் அடிக்கும் விராட் கோலியை விட்டுவிட்டு ரோஹித் சர்மா அதிக ரன்கள் எடுப்பார் என்று ராயுடு கூறியது தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.