ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் வாய்ப்பை ஆர்சிபி கைப்பற்றிய நிலையில், எலிமினேட்டர் போட்டியில் கிளன் மேக்ஸ்வெல் மட்டும்  தனி ஒருவராக அணியை வெற்றி பெற வைப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, அதிகமாக ரிஸ்க் எடுத்தால் நிச்சயம் பரிசு கிடைக்கும். எலிமினேட்டர் போட்டியில் நிச்சயம் மேக்ஸ்வெல் மட்டும் தனி ஒருவராக ஆர்சிபி அணியை வெற்றி பெற வைப்பார்.

தற்போது அவர் நல்ல ஒரு பார்மில் இல்லாதது அணியினருக்கும் ரசிகர்களுக்கும் வருத்தத்தை அளிக்கும் என்பது தெரியும். இருப்பினும் ஆஸ்திரேலியர்களை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் விளையாடியதை அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். தசை பிடிப்பால் அவதிப்பட்ட போதிலும் தனி ஒருவராக 200 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். நான் ஆர்சிபி இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது கடினம் என்று கூறினேன். இருப்பினும் அனைவருடைய கருத்தும் தவறு என்று நிரூபித்த ஆர்சிபியின் கதை அற்புதமானது. மேலும் அந்தப் போட்டி ஐபிஎல் வரலாற்றில் எழுதப்படும் என்று கூறியுள்ளார்.