மும்பையின் சான்டாக்ரூஸ் மேம்பாலத்தில் கால் டாக்ஸி ஒன்று வேகமாக சென்றுள்ளது. அந்த டாக்ஸியின் மேல் ஒருவர் அமர்ந்து கொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்பு டாக்ஸி ஓட்டுநர் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் வந்துள்ளார். அவரை தடுப்பதற்காக தான் அந்த நபர் டாக்ஸி மீது ஏறி நிறுத்த முயற்சித்துள்ளார்.

வீடியோவை காண

கார் வேகமாக செல்ல செல்ல மேலே அமர்ந்திருந்த நபர் “டாக்சி டிரைவர் ஒரு வாகனத்தை மோதிவிட்டு ஓட முயற்சிக்கிறார்” என்று சத்தம் போடுகிறார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் விபத்து குறித்து எந்த ஒரு புகாரும் வரவில்லை என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.