
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஊர்வசி ரவுதாலா. இவர் தமிழ் சினிமாவில் தி லெஜெண்ட் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வரும் நிலையில், தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் ஒரு தெலுங்கு படத்தில் நடிகை ஊர்வசி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
/ இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது படத்தில் ஒரு சண்டைக் காட்சியை படமாக்கி கொண்டிருந்தபோது திடீரென ஊர்வசி ஒரு விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதோடு காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் தற்போது நடிகை ஊர்வசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.