தென்கொரியா நாட்டின் போலீசார் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை வைத்திருபவர்கள் குறித்து ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா மற்றும் பாங்காங் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த விசாரணை தொடங்கிய நிலையில் இதுவரையில் 435 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தென் கொரியா தேசிய விசாரணை அலுவலகம் அறிவித்துள்ளது.

இதில் தென் கொரியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 374 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 258 பேர் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோக்களை வைத்திருந்ததோடு அதில் 74 பேர் அந்த வீடியோக்களை உருவாக்கியதாகவும் 42 பேர் அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இணையதளத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோக்களை பகிர்வது சட்டப்படி குற்றம்.

இது தொடர்பாக உலக அளவில் அனைத்து நாடுகளுமே தீவிர விசாரணைகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தென்கொரியாவும் அது தொடர்பாக விசாரணை நடத்தியதில், கைது செய்யப்பட்டவர்களில் 213 பேர் பள்ளி மாணவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்பிறகு 127 பேரில் 20 முதல் 30 வயது உடையவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதில் ஜப்பானில் மட்டுமே குழந்தைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறி கிட்டத்தட்ட 111 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடந்த வருடம் டெலிகிராம் செயலியில் குழந்தைகளின் பாதுகாப்புக்காக ஒரு அதிகாரியை நியமித்து சட்டவிரோத செயல்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.