அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தில் 4 மாத கைக்குழந்தை காரில் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக தனியாக வைக்கப்பட்டதால் அதிக வெப்பத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது மோஷே எர்லிக் என்பவருக்கு 35 வயது ஆகும் நிலையில் திருமணம் ஆகி மொத்தம் நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் குழந்தைகளை பள்ளிக்கு செல்வதற்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது குழந்தைகள் மூவரையும் பள்ளிக்கு அழைத்து சென்ற பிறகு நான்கு மாத குழந்தையை பராமரிப்பு மையத்திற்கு அழைத்து செல்ல இருந்தார்.

ஆனால் அவருக்கு திடீரென ஏதோ ஒரு முக்கிய வேலை வந்து விட்டதால் குழந்தையை காரில் வைத்ததை மறந்து விட்டார். அந்த காரின் வெளி வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் இருந்தபோதிலும் உள் வெப்பநிலை 35.5 டிகிரி செல்சியஸ் வரை இருந்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக அந்த குழந்தை காரில் இருந்ததால் அதிக வெப்பத்தின் காரணமாக மூச்சு திணறி உயிரிழந்துவிட்டது. இது தொடர்பாக தாயார் தகவல் கொடுத்த நிலையில் கடந்த 20ஆம் தேதி அவர்  காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் குழந்தைகள் பாதுகாப்பில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.