விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் செப் 17க்கு பதில் 18ம் தேதி என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி செப். 18 கொண்டாடப்படும் நிலையில், அதற்கு ஒருநாள் முன்பாக செப்.17ம் தேதி அரசு பொது விடுமுறை அறிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே செப்.17ம் தேதி விநாயகர் சதுர்த்திக்காக அறிவிக்கப்பட்ட விடுமுறையை ரத்து செய்த தமிழக அரசு, தற்போது செப்.18ம் தேதியை விடுமுறையாக அறிவித்துள்ளது.