நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சிலைகளை நிறுவ முன் அனுமதி மற்றும் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். சிலைகளை பிற வழிபாட்டு தளம் மற்றும் மருத்துவமனை, கல்வி நிலையத்திற்கு அருகில் வைக்கக்கூடாது. பிற மதத்தினரை புண்படுத்தும் வகையில் முழக்கம் இடக்கூடாது. சர்ச்சையான பதாகைகள் வைக்கக்கூடாது மற்றும் பட்டாசு வெடிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.