நம் நாட்டில் எந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சி பெறுகிறதோ அதை போன்று தொழில்நுட்பத்தை வைத்து மோசடி செய்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள். பல வழிகளில் ஏமாற்றுக்காரர்கள் ஆன்லைனில் மோசடி செய்து விடுகிறார்கள். அரசும் தொடர்ந்து மக்களை விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய தொலைத்தொடர்புத் துறை, தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் சேர்ந்து புதிய விழிப்புணர்வு யுக்தியை கையில் எடுத்துள்ளது. அதன்படி அனைத்து தொலைதொடர்புத் துறை நிறுவனங்களும் சைபர் கிரைமின் விழிப்புணர்வு வாசகங்களை வாடிக்கையாளர்களின் காலர் டியூனாக வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாள் ஒன்றுக்கு எட்டு அல்லது பத்து முறை விழிப்புணர்வு வாசகங்கள் காலர் டியூனாக ஒளிபரப்பப்படும் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது