இயற்கையில் எந்த ஒரு உயிரினமும் எப்போதும் பாதுகாப்பாக இருப்பதில்லை என்பதற்குச் சான்றாக ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு கொக்கு ஒரு பாம்பை வேட்டையாடித் தின்ன நினைக்கிறது. பாம்பைத் தனது அலகால் கவ்விப் பிடித்து, தப்பித்து ஓடவிடாமல் மீண்டும் மீண்டும் பிடித்து ஒரு புல்வெளிக்குத் தூக்கிச் செல்கிறது. அங்கே வைத்துப் பாம்பைக் கொன்று நிதானமாகச் சாப்பிடலாம் என்று கொக்கு நினைத்தது, ஆனால் அந்தத் திட்டம் அப்படியே தலைகீழாக மாறியது.
Shocking Video: बगुले ने किया हमला तो सांप ने भी थाम दी सांसें ऐसे किया जोरदार पलटवार
आपने अक्सर बड़े पक्षियों को सांप का शिकार करते देखा होगा लेकिन कभी कभी यह दांव उल्टा भी पड़ जाता है:
ऐसा ही एक मामला सामने आया जिसमें एक बगुला सांप का शिकार करने के लिए जमीन पर उतरा:
उसे… pic.twitter.com/Ft0eriv144
— KULDEEP SINGH (@Xkuldeepsingh09) March 1, 2026
சற்றும் எதிர்பாராத விதமாக, அந்தப் பாம்பு கொக்கின் கழுத்தை மிக வேகமாகச் சுற்றி இறுகப் பற்றிக்கொண்டது. இதனால் மூச்சு விடக்கூட முடியாமல் அந்தப் பறவை நிலைகுலைந்து போனது. ஒருகட்டத்தில் கொக்கு மிகவும் சோர்வடைந்து கீழே விழும் நிலைக்குச் சென்றாலும், எப்படியோ போராடி பாம்பின் பிடியிலிருந்து விடுபட்டுத் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டது. “யாரையும் எளியவர் என்று நினைக்கக்கூடாது” என்ற பாடத்தைப் புகட்டும் இந்த 49 நொடி வீடியோ தற்போது இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
