
தெலுங்கானா மேலாண் ஆணையர் மற்றும் இயக்குனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நிஜாமாபாத்தில் வசிக்கும் ஒருவருக்கு குடும்ப ஓய்வூதியத்தை வட்டியுடன் சேர்த்து வழங்குவதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். கடந்த 1969 ஆம் ஆண்டு தகுதிகாண் காலத்தை முடித்த எல். மோகன் ரெட்டியின் மனைவி விஜயலட்சுமி தாக்கல் செய்த ரிட் மனுவை நீதிபதி விசாரித்த நிலையில் மனுதாரர் குடும்ப ஓய்வூதியம் வழங்காதது பதிவேடுகள் கிடைக்காத காரணத்தால் தான் என்று கூறினார்.
மேலும் மனுதாரரின் குடும்ப ஓய்வூதியத்திற்கான நியாயமான உரிமையை பறிப்பதற்கு ஒரு காரணமாக இருக்க முடியாது என்று நீதிபதி நந்தா கூறி இந்த வழக்கை முடித்து வைத்தார்.