
பொதுவாக இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் ஒரு சில விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. சில வீடியோக்கள் ஆச்சரியத்தையும் உண்டாக்குகிறது. குறிப்பாக மிக வித்தியாசமான குரங்குகளின் பல குறும்புகளில் வீடியோக்களை நாம் இணையத்தில் பார்த்து வருகிறோம்.
அப்படி தற்போது ஒரு வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதாவது இந்த வீடியோவில் குரங்கு ஒன்று மனிதர்களைப் போல அலுவலகத்தில் கோப்புகளை பார்த்து கணினியில் பணிபுரிவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் குரங்கு மிகுந்த கவனத்தோடு பைலின் பக்கங்களை திருப்பி பார்ப்பதையும் கணினியில் கீபோர்டு தட்டி தட்டி ஆர்வமாக வேலை செய்வதையும் பார்க்க முடிகிறது.
अभ्यर्थियों का इंतज़ार हुआ खत्म, अब रिज़ल्ट जारी होने ही वाला है.. 😆😂 pic.twitter.com/BFwWZjV9VF
— Educators of Bihar (@BiharTeacherCan) September 18, 2023