
நடப்பு கல்வி ஆண்டானது வரும் 28ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அரசு பள்ளிகளில் இன்று(ஏப்., 17) முதல் 2023-24ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் 2023-24க்கான மாணவர் சேர்க்கையை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார்.
இதன்பின் அவர் பேசுகையில், கோடை விடுமுறை காலத்தில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாடம் எடுப்பது குறித்து மாவட்ட அளவில் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், தனியார் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளார்.