இந்திய தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீண்டும் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், “அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் & இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கையெழுத்திட வேண்டும். அத்தகைய Specimenதான் ஏற்கெனவே ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எனது கையெழுத்து இல்லாத மனுவை ஏற்பது சட்ட விரோதம்” என்று ஓபிஎஸ் குறிப்பிட்டிருக்கிறார்