
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் நடிகர் விஜயின் மாநாடு குறித்தும் அரசியல் கொள்கைகள் குறித்தும் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயின் கொள்கைகள் வேறு எங்கள் கட்சியின் கொள்கைகள் வேறு என்று கூறியுள்ளார். அதன் பின் மாநாடு பற்றி இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பொதுவாக ஒரு நடிகர் வருகிறார் என்றால் அவரைப் பார்ப்பதற்கு கூட்டம் வரத்தான் செய்யும். அது இயல்புதான். அதோடு மாநாட்டில் கலந்து கொள்ள வந்தவர்களின் ஓட்டுகள் எல்லாம் கண்டிப்பாக கிடைக்குமா என்று கேட்டால் அது சந்தேகம்தான்.
எம்ஜிஆர் மற்றும் கமல்ஹாசன் உள்ளிடோர் எல்லாம் கட்சி தொடங்கிய போது ரசிகர்களை சந்தித்து வந்தனர். அதேபோன்று திரைத்துறையில் இருந்து வந்த நானும் மக்களை சந்தித்து வந்தேன். விஜயின் வருகையால் நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகள் கண்டிப்பாக குறையாது. மேலும் விஜயின் ரசிகர்கள் கூட சிலர் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடலாம் என்று கூறினார். மேலும் முன்னதாக நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைக்கும் என்று கூறிய நிலையில் விஜயை தம்பி என்று சீமான் கூறினார். மேலும் தற்போது விஜயின் கொள்கைகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்று முன்னதாக கூறிய அவர் விஜயின் ரசிகர்கள் கூட நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.