கரூர் துயர் சம்பவத்தின் போது, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மீது ஒருவர் செருப்பு வீசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, இது திட்டமிட்ட தாக்குதலா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று (அக்.15) இது தொடர்பான விவாதம் ஏற்பட்டது. பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் இந்த சம்பவம் குறித்த கேள்வியை எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், “அந்த கூட்ட நெரிசலில் இருந்த பொதுமக்களுக்கு குடிநீர் இல்லாத நிலை ஏற்பட்டது. மக்கள் தண்ணீர் வேண்டும் என்று கூறியபோது, அந்த கோரிக்கையை தவெக தலைவர் விஜயின் கவனத்திற்கு கொண்டு செல்லவே ஒருவர் செருப்பை வீசியுள்ளார். ” என தெளிவுபடுத்தினார். மேலும், இந்த விவகாரம் தவெக தலைவருக்கு எதிரானதல்ல என்பதையும், அச்சமயம் ஏற்பட்ட அவலநிலையை உணர்வதற்கான வெளிப்பாடாக இருந்ததையும் முதல்வர் தெரிவித்தார்
