தமிழக அரசியலில் இப்போது தவெக-வின் எக்ஸ் பதிவுதான் டாப் ட்ரெண்டிங்! திமுக அரசை விமர்சிப்பதில் பிரதமர் மோடிக்கும், அவரது ஒன்றிய அரசுக்கும் இடையே இருக்கும் முரண்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் (TVK IT Wing) தனது எக்ஸ் பக்கத்தில் போட்டு உடைத்துள்ளது.

மதுராந்தகம் வந்த பிரதமர் மோடி, திமுகவை C.M.C (Corruption Mafia Criminality) என்று கடுமையாகச் சாடினார். பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, போதைப்பொருள் கலாசாரம் என அனல் பறக்கப் பேசினார். ஆனால், வேடிக்கை என்னவென்றால், அதே மோடி அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழ்நாடு அரசை ‘ஆகா ஓகோ’ எனப் புகழ்ந்து தள்ளியுள்ளது! பிரதமர் கண்கள் சிவக்கத் தாக்குவதும், அவரது அரசு கண்கள் பனிக்கப் புகழ்வதும் என்ன மாதிரியான அரசியல் எனத் தவெக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது. இதை “பவளவிழா பாப்பா… பாத்து சிரிங்க பாப்பா..” என நக்கலாக முடித்துள்ளது அந்தப் பதிவு.