டைரக்டர் வெங்கட கிருஷ்ணா ரோகநாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம் “யாதும் ஊரே யாவரும் கேளீர்”. இந்த படத்தில் மேகா ஆகாஷ் ரகுஆதித்யா, நடிகர் விவேக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி இலங்கையிலிருந்து வந்து வாய்ப்புகளை தேடும் இசைக் கலைஞராக நடித்து உள்ளார்.
இந்த படம் 2 வருடங்களுக்கு முன்னதாகவே முடிந்தாலும் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் முடங்கி கிடந்தது. இந்நிலையில் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் ரிலீஸாகி இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. வருகிற மே 19-ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.
https://youtu.be/xbmDg5mnaps