லோகேஷ் கனகராஜ் டைரக்டில் கமல்ஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியான படம் “விக்ரம்”. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் வாயிலாக இப்போது தமிழ் திரையுலகில் யூனிவெர்ஸ் எனும் ஒரு விஷயம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக லியோ படமும் இந்த யூனிவெர்சில் இணையுமா என்று கேள்வி எழுந்து உள்ளது.

விக்ரம் திரைப்படத்தில் பல்வேறு ஆக்ஷன் காட்சிகள் மிரட்டலாக இருக்கும். அதிலும் ஒவ்வொரு இடத்திலிருந்து துப்பாக்கிகளை எடுத்து கமல் சுடுவதுபோன்று கிளைமாக்ஸில் காட்சி ஒன்று இருக்கும். அக்காட்சி திரையரங்கில் பெரிதும் ரசிக்கப்பட்டது. இந்த நிலையில் இக்காட்சியின் மேக்கிங் வீடியோவானது இப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.