இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ஆரம்பகால சினிமா அனுபவங்கள் குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சுவாரசியமாகப் பேசியுள்ளார்.
நான் 22 வயதில் ‘போடா போடி’ திரைப்படத்தைத் தொடங்கியதாகவும், ஆனால் பல்வேறு தாமதங்களால் அது வெளியாகும்போது தனக்கு 27 வயதாகிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக அந்தப் படம் நடிகர் விஜய்யின் ‘துப்பாக்கி’ படத்துடன் வெளியானது.
அவர் சுட்ட 13-வது ஆள் நான்தான் – விக்னேஷ் சிவன்
`போடா போடி’ திரைப்படத்தின் இயக்குநராக நான் ஒப்பந்தமானபோது எனக்கு 22 வயது. ஆனால், அப்படம் வெளியாகும்போது 27 ஆகிவிட்டது
அதுவரை ஏதாவது ஒரு தாமதம் நடந்துகொண்டே இருந்தது. இறுதியாக, நடிகர் விஜய்யின் `துப்பாக்கி’
திரைப்படத்துடன் `போடா… pic.twitter.com/vww56LbYbA— Thanthi TV (@ThanthiTV) April 5, 2026
“>
துப்பாக்கி படத்தின் இடைவேளைக் காட்சியில் விஜய் 12 பேரைக் கொல்வார் என்று குறிப்பிட்ட விக்னேஷ் சிவன், தனது படம் அந்தப் பெரிய படத்துடன் போட்டியிட்டுத் தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டி, “உண்மையில் விஜய் அன்று சுட்ட 13-வது ஆள் நான்தான்” என்று கவலையுடனும் நகைச்சுவையுடனும் தெரிவித்துள்ளார்.
