நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் நடிகர் நாசரின் மூத்த மகன் நூருல் ஹூசைன் ஃபைசல் உறுப்பினராக இணைந்துள்ளார். இது குறித்து புகைப்படத்தை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஜய்யின் தீவிர ரசிகரான ஃபைசல் விபத்து ஒன்றில் சிக்கி கோமா வரை சென்று மீண்டு வந்தார். இதனை கேள்விப்பட்ட விஜய், ஃபைசலின் பிறந்தநாள் அன்று ஒருமுறை நேரில் சென்று அவருக்கு சர்ஃப்ரைஸ் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது