கடைசி தோட்டா என்ற படம் தொடர்பான விழாவானது சமீபத்தில் நடந்தது . இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராதா ரவி, நடிகைகள்  படத்தில் விளம்பர நிகழ்ச்சிகளில்  பங்கேற்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அது யாரும் கேட்பதில்லை. நடிகன் என்பவன் இறந்தும் நடிப்பவன்.  அவனுடைய இறப்பு வீடியோவை வெளியிட்டு பணம் சம்பாதிக்கிறார்கள்.

அதேபோல அவன் இறந்தாலும் அவன் நடித்த கதாபாத்திரங்களும் ,காட்சிகளும் அடிக்கடி ரசிகர்கள் கண்முன்னே வந்து கொண்டே தான் இருக்கும். தற்போது நான் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இல்லை. விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை வரவேற்கிறேன். அவர் என்னை அழைத்தால் நிச்சயம் அவருடைய கட்சியில் இணைவேன் என்று தெரிவித்துள்ளார்.