தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) அனுமதி வழங்குவதில் திட்டமிட்டு முட்டுக்கட்டை போடப்படுவதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களுக்கு செயலி (App) மூலம் அனுமதி கோரினால், அந்த நிகழ்ச்சிக்கு கேட்கப்பட்ட நேரம் கடந்துவிட்ட பிறகுதான் அனுமதி வழங்கப்படுவதாக அவர் சாடியுள்ளார். இந்தச் செயல் தவெக நிர்வாகிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

​தமிழகத்தில் பெரும்பாலான அதிகாரிகள் ஆளுங்கட்சியான திமுக-வின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இதன் காரணமாகவே தமிழகம் முழுவதும் தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு முறையான அனுமதி கிடைக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், திமுக-வுக்கு ஆதரவாகச் செயல்படும் அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வரும் வேளையில், தவெக முன்வைத்துள்ள இந்த அரசியல் புகார் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.