கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகரான துர்கேஷ் மிஸ்ரா என்பவர், ஃபிஃபா உலகக் கோப்பையில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தனது நகரத்தில் சுவரொட்டிகளை ஒட்டி பணம் திரட்டியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“ரொனால்டோவின் ரசிகராக இருந்தால் 7 ரூபாய் நன்கொடை அளியுங்கள்” என்று அதில் குறிப்பிட்டிருந்ததை நம்பி, மெஸ்ஸி ரசிகர்கள் உட்பட பலரும் பணம் அனுப்பியுள்ளனர். இரண்டு நாட்களில் சுமார் 1,200 ரூபாயைச் சேகரித்த அவர், தனது சொந்தப் பணத்தையும் சேர்த்து, ரொனால்டோவின் வெற்றிக்காகச் சிறப்புப் பூஜை செய்துள்ளார்.

இந்த வினோதமான முயற்சி இன்ஸ்டாகிராமில் பல லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. துர்கேஷ் ஏற்கனவே விராட் கோலி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் இதுபோன்று பணம் திரட்டியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Durgesh Mishra (@durgeshmishhra)

“>

இந்த ஆண்டு உலகக் கோப்பையை ரொனால்டோ வெல்வாரா என்பது கால்பந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. எது எப்படியோ, துர்கேஷின் இந்தத் தனித்துவமான ரசிகர் செயல் விளையாட்டு உலகையும், ரசிகர்களின் உணர்ச்சிகளையும் மீண்டும் ஒருமுறை சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக்கியுள்ளது.