எடப்பாடி பழனிசாமி (EPS) அதிமுகவில் இருக்கும் வரை தான் அங்கு இணையப்போவதில்லை என்பதில் ஓ. பன்னீர்செல்வம் (OPS) உறுதியாக இருக்கிறார். இந்த நிலையில், அவர் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) இணைவாரா என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “ஓபிஎஸ் விரைவில் ஒரு நல்ல முடிவெடுப்பார்” என்று லாகவமாகப் பதிலளித்துள்ளார்.

செங்கோட்டையனின் இந்த ஒற்றைப் பதில், அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
​அரசியல் நோக்கர்களின் கருத்துப்படி, ஓபிஎஸ் மற்றும் தவெக தலைவர் தளபதி விஜய் தரப்புக்கு இடையே ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

அதிமுகவின் வாக்கு வங்கியைத் தன் பக்கம் இழுக்க ஓபிஎஸ் போன்ற ஒரு சீனியர் அரசியல்வாதி தவெக-வுக்குப் பலம் சேர்ப்பார் என்று கணிக்கப்படுகிறது. விரைவில் இந்தக் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதியின் அரசியல் பயணத்தில் இது ஒரு மிகப்பெரிய ‘ட்விஸ்ட்’ ஆக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.