
தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் பதவியில் இருந்து சிறப்பாக செய்து வருகிறார். சமீபத்தில் துணை முதல்வராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தனது பணியை சிறப்பாக ஆற்றி வரும் நிலையில் திமுகவின் பதவிக்காலம் இன்னும் ஓராண்டில் நிறைவடைய உள்ளது. 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது புதிதாக விஜய் களத்தில் இறங்க உள்ளார்.
சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியல் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் கடைசியாக தளபதி 69 திரைப்படத்தை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் களம் இறங்குகின்றார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் மற்றும் கட்சியின் நிர்வாகிகளுக்கு பதவி என அடுத்தடுத்த வேலைகளில் மும்முரம் காட்டி வருகின்றார்.
இப்படியான நிலையில் விஜய் அரசியல் பயணம் குறித்து பேசி உள்ள முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், தலைவா படத்தில் இடம் பெற்ற டேக் லைனால் ஏற்பட்ட பிரச்சனையால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கொடநாடுக்கு விஜய் சென்று இருந்தார். ஆனால் அவரால் சந்திக்க முடியவில்லை. இதையெல்லாம் விஜய் மனதில் வைத்துக் கொண்டு இருக்கலாம். ஆனால் அவருடைய நோக்கம் தற்போது வேறு ஆக கூட இருக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் தற்போது முதல்வர் ஸ்டாலின் உள்ளார் அடுத்து அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் வரலாம். இதை கணக்கில் வைத்துக் கொண்டு கூட விஜய் அரசியலில் களம் இறங்கி இருக்கலாம். சினிமாவில் தான் விஜய் உதயநிதியை விட பெரிய நடிகர். ஆனால் அரசியலில் விஜயை விட உதயநிதி தான் பெரிய ஆள். ஏனென்றால் பாரம்பரிய அரசியலில் இருந்து உதயநிதி வந்துள்ளார். அதனால் அவருக்கு தான் அரசியலில் சுழிவு நெழிவு எல்லாம் நன்றாக தெரியும் என்று கருணாஸ் பேசியுள்ளார்.