
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரவிருக்கும் நாடாளுமன்ற் தேர்தலிலும் போட்டியிடுகிறார். இதனால் இது குறித்து அரசியல் கட்சியினர் பல விதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் ‘தவெக’ கட்சி குறித்து கேள்வி எழுப்பும்போது எல்லாம் சீமான் வரவேற்று பேசுகிறார்.
அவருடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு ‘விஜய்யிடம் கேளுங்கள்’ என்கிறார். இதனை நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது. என்றைக்கும் தனித்துப் போட்டி என்ற கொள்கையின் படியே கட்சியை அண்ணன் வழிநடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்