
தமிழக வெற்றி கழகம் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிட இருக்கும் நிலையில் தற்போது கட்சியில் மாவட்ட செயலாளர்கள் உட்பட உட்கட்சி பதவிகளை நியமிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதோடு கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகளையும் தமிழக வெற்றி கழகம் தொடங்கி விட்டதாக கூறப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைத்ததாக நேற்று செய்தி வெளியானது.
தமிழக வெற்றி கழகத்துடன் முதல் கட்சியாக முஸ்லிம் லீக் கூட்டணி வைத்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதனை அந்த கட்சியின் தலைவர் முஸ்தபா மறுத்துள்ளார். அதாவது தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்த ஆதவ் அர்ஜுனாவுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் முஸ்லிம் லீக் கட்சி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைத்ததாக வந்த செய்திகள் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது.