
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் அடுத்த மாதம் ஆறாம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசி உள்ளார். அவர் பேசுகையில் “நடிகர் விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது மூன்று கதைகளை அவரிடம் கூறினேன் மூன்றையும் கேட்ட அவர் நீங்கள் என்னை குழப்பி விட்டீர்கள் என்று கூறிவிட்டார்.
நான் அவரிடம் மூன்று கதைகளில் ஒரு கதையை தேர்வு செய்யுங்கள் என்று கூறிய போது எந்த படம் என்று நீங்களே சொல்லுங்கள் என்று கூறிவிட்டார். அவர் அவ்வாறு கூறியதை என்னால் மறக்கவே முடியாது. நான் கூறிய மூன்று கதைகளுமே தற்போதைய விஜய்யின் நிலைக்கு ஏற்ற சிறப்பான கதைகளாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.