நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, என்னுடைய சொந்த நாட்டில் எனக்கு பாதுகாப்பு தேவையில்லை. என்னுடைய நாட்டுக்கு நான் தான் பாதுகாப்பு. தேர்தலை வாக்குகளை விற்கும் சந்தையாக மாற்றிவிட்டனர். மானுடத்தை கொன்றுவிட்டு மதத்தை தூக்கி நிறுத்துவதா.? கைக்கூலி ஓட்டு பிச்சை என்று கூறுவதா.?

ஆதாயம் இருந்தால் அனைவரும் பிரபாகரன் போட்டோவை பயன்படுத்துங்கள். நானும் இவ்வளவு நாள் இதைத்தான் கேட்டு வந்தேன். மயிலாடுதுறை கொலை விவகாரத்தில்முன் விரோதமே காரணம் என போலீசார் கூறுகின்ற போது அரசை பாதுகாக்கவே இப்படி அவர்கள் செய்வது வேதனை அளிக்கிறது என்றார். மேலும் நடிகர் விஜய்க்கு மத்திய அரசு சமீபத்தில் ஒய்பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று கூறிய நிலையில்அதில் ஏதாவது அரசியல் ஆதாயம் இருக்கும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கூறும் நிலையில் தற்போது சீமானும் அதனை விமர்சித்துள்ளார்.