பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். அந்த கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு விஜயின் மனைவி சங்கீதா வரவில்லை. விஜயுடன் சண்டை போட்டதால் தான் தமிழக வெற்றி கழகம் முதல் மாநாட்டிற்கு சங்கீதா வரவில்லை என சோசியல் மீடியாவில் செய்திகள் உலா வந்தது.

மேலும் விஜயுடன் சண்டை போட்டு சங்கீதா லண்டனில் வசித்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் மேக்கப் ஆர்டிஸ்ட் விஜி என்பவர் விஜய் வீட்டிற்கு சென்று சங்கீதாவிற்கு இரண்டு முறை மேக்கப் போட்டதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் விஜயும் சங்கீதாவும் ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது.