வரும் செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் இருந்து தமது முதல் தேர்தல் பிரசார பயணத்தை தொடங்க உள்ள தவெக தலைவர் விஜய், அதன் முன்னோடியாக கட்சித் தொண்டர்களுக்கு முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.
இந்த பிரசார பயணத்திற்கு போலீசாரால் சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருப்பது தெரிந்த செய்திதான். அந்த நிலையில், “சட்டத்தைக் கடைபிடித்து அமைதியாக செயல்படவேண்டும். தவெக தொண்டர்கள் யாரும் சட்டத்தை மீறி எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது” என விஜய் கவனமாக அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமது முதல் அரசியல் பயணமே மக்களிடம் நேரடியாகச் சந்தித்து பேசும் வகையில் நடைபெறவிருப்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படக்கூடாது என்பதற்காக விஜய் இவ்வாறு எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தனது பிரசாரத்திற்கு காவல்துறை விதித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் முழுமையாக கடைபிடிக்கவேண்டும் எனவும், பொதுமக்களிடையே தவெக கட்சியின் நல்ல எண்ணங்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளதெனவும் விஜய் தனது தொண்டர்களிடம் வலியுறுத்தியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
