தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் இதுவரை 500 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அதில் இந்தியாவில் மட்டும் இதுவரை 300 கோடி வசூலை தாண்டி உள்ளது. இதற்கு முன்பாக அதிகபட்சமாக விஜயின் திகில் திரைப்படம் 321 கோடி, மெர்சல் 267 கோடி மற்றும் சர்க்கார் 258 கோடி வசூல் செய்த நிலையில் விஜயின் சினிமா வரலாற்றில் லியோ திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.