
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் எதிர்காலத்தில் விஜயுடன் கூட்டணி வைப்பீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு திருமாவளவன் எனக்கு தெரியாது என்று பதில் வழங்கினார். அதன்பிறகு, விஜயின் அரசியல் வருகையை வரவேற்கிறேன் என்று கூறியவர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எங்களுடைய கொள்கை என்று கூறினார். இந்நிலையில் முன்னதாக அம்பேத்கர் நூல் வெளியீட்டு விஜய் கலந்து கொண்ட நிலையில் அந்த விழாவை திருமாவளவன் புறக்கணித்தார்.
அதாவது திமுகவை விஜய் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அந்த விழாவில் கலந்து கொண்டால் தேவையில்லாத சலசலப்புகள் ஏற்படும் என்பதற்காக விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறினார். அதன்பிறகு அந்த விழாவில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா திமுகவுக்கு எதிராக விஜய் ஆதரவாக பேசியதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் இந்த பரபரப்புக்கு இடையில் விஜயுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு தெரியாது என்று திருமாவளவன் பதில் வழங்கியது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது