நாகையில் பிரசாரம் மேற்கொண்ட தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், “நாகை அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர்கள் இல்லை” எனக் கூறி, திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

அவரது இந்த குற்றச்சாட்டு, சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. விஜய் பேசும் ஒவ்வொரு கருத்தும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.

இது குறித்து இன்று செப்டம்பர் 20ம் தேதி செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “விஜய் கூறியது யாரோ எழுதிக் கொடுத்ததைப் போலவே உள்ளது. உண்மையைப் பார்த்து பேசவேண்டும்.

நாகை அரசு மருத்துவமனையில் நேரில் சென்று பாருங்கள். அங்கே எவ்வாறு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன, எல்லாம் தெரிந்துவிடும். ஒரு பொறுப்புள்ள அரசியல் தலைவர் உண்மையைக் கண்டு பேச வேண்டும்” என கூறி, நேரடியாக விஜய்க்கு சவால் விடுத்தார்.