புதுக்கோட்டையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்ற காரை பின்தொடர்ந்து சென்ற முன்னாள் எம்எல்ஏ கார் விபத்தில் சிக்கியதில் அவர் பலத்த காயமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது முன்னாள் எம்எல்ஏ ராசு காரில் சென்று கொண்டிருந்த நிலையில் அவருடைய வாகனம் திடீரென இரு சக்கர வாகனத்தின் மீது மோதி சாலையை விட்டு இறங்கி தரையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ராசு உட்பட மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர்களை  ஆம்புலன்ஸ் வரவழைத்து உடனடியாக சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.