விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து அந்த கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா 6 மாத காலம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதாவது அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவின் போது திமுகவுக்கு எதிராக விஜய்க்கு ஆதரவாக அவர் பேசியதால் கட்சி நலனுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி திருமாவளவன் அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளார். கட்சியிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் ஆதவ் அர்ஜுனா
இன்று ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டார். அதில் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்துடன் ஏழை எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை இனி மேற்கொள்ள போவதாக அவர் பதிவிட்ட நிலையில் அதனுடன் ஒரு வீடியோவையும் வெளியிட்டார்.

இந்நிலையில் இதனை விமர்சித்து தற்போது இயக்குனர் அமீர் ஒரு எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினை வலிமை இழக்க செய்து திருமாவளவனை தனிமைப்படுத்த நினைக்கும் அரசியல் ப்ரோக்கர்களை எதிர்த்து களமாட வேண்டிய நேரம் இது. மக்களுக்கு தெரியாமல் மன்னரை உருவாக்கியவர் தற்போது தனக்கு பதவி கிடைக்கவில்லை என்றவுடன் மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்யப்போவதாக வீடியோ வெளியிடுகிறார். என்ன கொடுமை சார் இது என்று பதிவிட்டுள்ளார். மேலும் முன்னதாக விஜய் ஆதவ் அர்ஜுனா உடன் நட்பு கொள்ளக்கூடாது என்றும் பணக்காரர்களின் நட்பு ஆபத்தில் முடியும் என்றும் இயக்குனர் அமீர் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.