விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா தற்போது அந்த கட்சியில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக இயக்குனர் அமீர் ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் தாமாகவே கட்சியிலிருந்து நீக்குவார்கள் அதிலிருந்து அரசியல் செய்யலாம் என்று காத்திருந்த செல்வந்தர்களுக்கு அண்ணன் திருமா அவர்களின் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் தானாகவே கட்சியிலிருந்து விலகி விட்டனர். எப்படி இருந்தாலும் விசிகாவை வீழ்த்த நினைத்த சதி விலகி விட்டது‌ நல்லது என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்ட போது திமுகவுக்கு எதிராகவும் விஜய்க்கு ஆதரவாகவும் பேசினார். அதன் பிறகு கட்சி நலனுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி திருமா அவரை கட்சியிலிருந்து 6 மாதக்காலம் சஸ்பெண்ட் செய்த நிலையில் தொடர்ந்து ஆதவ் அறிக்கை வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக திருமாவளவன் நேற்று காலை அவரிடம் வேறு ஏதோ பெரிய திட்டம் இருப்பது போல் தோன்றுகிறது. மீண்டும் கட்சியில் சேர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து மாலையில் அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் இந்த நிலையில்தான் அமீர் ஆதவ் விலவியது குறித்து பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.