2026-ஆம் ஆண்டிற்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் குடிமக்கள் விசா ஏதுமின்றி உலகின் 193 நாடுகளுக்குச் சுதந்திரமாகப் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிங்கப்பூரைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன. டென்மார்க், ஸ்பெயின், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் 186 நாடுகளுக்கு விசா இன்றி செல்லும் வசதியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளன.

இந்த சர்வதேசப் பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் 85-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டின் தரவரிசையோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், வல்லரசு நாடான அமெரிக்கா ஒரு புள்ளி சரிந்து தற்போது 10-வது இடத்தில் உள்ளது; அந்நாட்டு குடிமக்கள் 179 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய முடியும்.

இதனால் சர்வதேச அளவில் நாடுகளுக்கு இடையிலான பயண சுதந்திரம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளின் வலிமையை அடிப்படையாகக் கொண்டு லண்டனைச் சேர்ந்த ஹென்லி நிறுவனம் ஆண்டுதோறும் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது.