சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராயபுரம் மற்றும் திருவிகநகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான புதிய அதிமுக உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். அதன்பின் அவர் அவர் பேசியதாவது, திமுக அமைச்சர்களும் நிர்வாகிகளும் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியிருக்கிறார்கள். திமுக யாருடைய நுகர்வோ, அதற்கு மத்திய அரசு மாறிவிட்டது. அண்ணாமலை, திமுக ஊழலைப் பற்றிய தகவல்களை ஆளுநருக்கு வழங்கினார். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் பாஜகவை அழைத்ததை  பார்க்கும் பொழுது ஸ்டாலினின் தலைவர் மோடி தானோ? என்று எனக்கு தோன்றுகிறது. மின் கட்டண உயர்வு மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால், தொழில்துறை நிலைமை மோசமாக உள்ளது. முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிய விவரங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை.

திமுக அரசு 1,500 தனியார் பார்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது மற்றும் அரசு சொத்துகள் முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. பாஜக 4 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்ற பிறகும், திமுக விஜயின் கட்சிக்கு எதிரான தடைகளை உருவாக்குகிறது. விஜயின் கட்சியால் திமுக பாதிக்கப்படுமா என்ற பயத்தில், திமுக வெவ்வேறு நெருக்கடிகளை உருவாக்குகிறது என ஜெயக்குமார் கூறினார்.

இதைத் தொடர்ந்து நாணய வெளியிட்டு விழாவில் நடந்த இந்த சம்பவம் விக்ரமன் படத்தில் வரும் பாசப்பிணைப்பு போல அண்ணன் தம்பி ஆக திமுகவும் பாஜகவும் இருப்பதாக அவர் கூறினார். அதோடு எப்போதும் கருப்பு பேண்ட் அணிந்து வரும் முதல்வர் அன்று ஏன் வேறு உடையில் வந்தார் எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் பாஜகவின் கொத்தடிமையாக திமுக மாறி வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.