கடந்த ஜூன் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருகான் என இந்திய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் திருமணம் முடிந்த சில நாட்கள் கழித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண புகைப்படங்களை தனது instagram பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஆனால் இந்த திருமணத்தை ஆவணப்படுத்தி அதன் ஒளிபரப்பு உரிமையை netflix நிறுவனம் பெற்றிருந்ததால் அதிகாரப்பூர்வமான அந்நிகழ்வின் வீடியோக்கள் எதுவும் வெளியாகவில்லை.

பியாண்ட் தி ஃபேரி டேல் என்னும் பெயரில் நயன்- விக்கி திருமணத்தின் ஆவண வீடியோவை நெட்பிளிக்ஸ் விரைவில் வெளியிடவுள்ளது. அந்த வீடியோவின் டீசர் ஏற்கனவே வெளியாகியுள்ளது. இந்நிலையில் நயன் – விக்கி திருமணத்தின் ஆவணப்படுத்தப்பட்ட வீடியோவின் போஸ்ட் production பணிகள் நிறைவடையாத காரணத்தினால் இந்த வீடியோவானது வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது குறித்து அதிகார்வபூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.