
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் திமுக கூட்டணி சார்பாக அன்னியூர் சிவா, பாஜக கூட்டணி சார்பாக பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா உள்ளிட்ட 29 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நாளை மாலையுடன் நிறைய பெற உள்ளது. இதனைத் தொடர்ந்து நேரடியாகவோ பிற வழிகளிலோ பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.