
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த மாதம் 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் 300 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளதாக படக்குழு அண்மையில் அறிவித்தது.
அதன் பிறகு வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே, தீ தளபதி, ஜிமிக்கி பொண்ணு, அம்மா சென்டிமென்ட் பாடல் போன்றவைகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வா தலைவா வா பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது.
My fav #VaaThalaivaa Video Song from #MegaBlockbusterVarisu is here 🥁❤️💣💃#Varisu 🧨💃 Enjoy this beautifully Shot Video and feel the energy with your earphones. 🥁💪🏼❤️#VaaThalaivaa is here 🥁🥁🥁🥁🥁🥁
— thaman S (@MusicThaman) February 7, 2023