
இந்தியா ஆல் ஸ்டார்ஸ் மற்றும் பிரேசில் லெஜெண்ட்ஸ் அணிகளிடையே நட்சத்திர கால்பந்து போட்டியானது சென்னை ஜவகர்லால் நேரு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய ஆல் ஸ்டார் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐஎம் விஜயன் டிசல், பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கு ரொனால்டினோவும் கேப்டனாக இருந்தார்கள். போட்டியின் முடிவில் பிரேசில் லெஜன்ட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய ஆல் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது.
Finally The boy met his idol @10Ronaldinho 😍 @Akracingoffl #Aadvik #AjithKumar #Ajith wow Aadvik! https://t.co/mUx8CaZ9mS pic.twitter.com/uXjauJvayZ
— arun (@arianoarun) March 30, 2025
இந்த போட்டியை பொதுமக்கள் உட்பட பிரபலங்கள் அனைவரும் வந்து கால்பந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி தங்களுடைய ஆதரவு வெளிப்படுத்தினார்கள். மேலும் இந்த போட்டியை பார்ப்பதற்கு நடிகை ஷாலினி அஜித்குமார் வந்திருந்தார். அவரோடு மகன் ஆத்விக்கும் வந்திருந்தார். அப்போது பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டினோ நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்கை சந்தித்து தலையை வருடி கொடுத்து ஊக்கப்படுத்தி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.